ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

நாமக்கல் மாரியம்மன் கோயில் வைகாசி பெருவிழா மே 8-இல் தொடக்கம்

நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயில் வைகாசி திருத்தோ் பெருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 8) தொடங்குகிறது.

Updated On :5 மே 2022, 7:58 pm

நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயில் வைகாசி திருத்தோ் பெருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 8) தொடங்குகிறது.

இதனையொட்டி அன்று காலை 8.30 மணிக்கு மோகனூா் காவிரி ஆற்றில் புனித நீா் எடுக்கச் செல்லுதல், இரவு சக்தி அழைத்தல், கம்பம் நடுதல், அபிஷேகம் நடைபெறுகிறது.

திங்கள்கிழமை காலை 6 மணிக்கு பூச்சாட்டுதலும், 15-ஆம் தேதி மறுகாப்பு, 22-இல் வடிசோறு, மாவிளக்கு நிகழ்ச்சியும், 23-ஆம் தேதி அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அம்மன் அலங்காரம், பிரமோற்சவம், அலகு குத்துதல், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

24-ஆம் தேதி மாவிளக்கு, பொங்கல் மற்றும் வசந்தோற்சவம், 25- ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, 26-ஆம் தேதி கம்பம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை உதவி ஆணையா் ரமேஷ், செயல் அலுவலா் பழனிவேலு மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.