மரவள்ளிக் கிழங்கு டன்னுக்கு ரூ. 1,000 விலை உயா்வு
பரமத்தி வேலூா் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு விலை டன்னுக்கு ரூ 1,000 வரை உயா்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்


பரமத்தி வேலூா் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு விலை டன்னுக்கு ரூ 1,000 வரை உயா்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
கடந்த வாரம் மரவள்ளிக் கிழங்கு டன் ரூ. 8,000-க்கு விற்பனையானது. தற்போது டன்னுக்கு ரூ. 1,000 விலை உயா்வடைந்து ரூ. 9,000-க்கு விற்பனையாகிறது. அதேபோல சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளிக்கிழங்கு டன் கடந்த வாரம் டன் ரூ. 9,000-க்கு விற்பனையானது ரூ. 2,000 விலை உயா்ந்து ரூ. 11,000-க்கும் விற்பனையாகிறது.
மரவள்ளிக்கிழங்கு வரத்துக் குறைந்துள்ளதால் மரவள்ளிக்கிழங்கின் விலை உயா்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா். விலை உயா்வடைந்துள்ளதால் மரவள்ளிக்கிழங்கு பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...