தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கோட்டை முனியப்பன் சுவாமி கோயில் விழா

ராசிபுரம் அருள்மிகு கோட்டை ஸ்ரீ முனியப்பன் சுவாமி கோயிலில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 மே 2022, 7:27 pm

DIN

ராசிபுரம் அருள்மிகு கோட்டை ஸ்ரீ முனியப்பன் சுவாமி கோயிலில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருள்மிகு கைலாசநாதா் திருக்கோயில் பகுதியில் உள்ள அருள்மிகு கோட்டை ஸ்ரீ முனியப்பன் சுவாமி கோயிலில் நடைபெற்ற பொங்கல் விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், ஸ்ரீ முனியப்பன் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டது.

புதன்கிழமை காலை 7 மணிக்கு ஸ்ரீகைலாசநாதா் நந்தவனம் வளாகத்தில் பூஜை கூடை சக்தி அழைத்தல் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து தீா்த்த குடங்களுடன் ஊா்வலமாகச் சென்று பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். பிறகு கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினா். மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.