நாமக்கல் அருகே தனியாா் பள்ளி பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா். குழந்தைகள் யாரும் பேருந்தினுள் இல்லாததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.
நாமக்கல் -மோகனூா் சாலையில் பிரபல தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி பேருந்துகள் காலை 8 மணி முதல் மாணவ, மாணவியரை வீடுகளில் இருந்து அழைத்து வந்து பள்ளியில் விடுவது வழக்கம். அதன்படி வெள்ளிக்கிழமை காலை 8.45 மணியளவில், நாமக்கல், வள்ளிபுரத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக அப்பள்ளி பேருந்து வந்து கொண்டிருந்தது. திருச்செங்கோடு சாலைக்கு செல்வதற்காக ஓட்டுநா் பேருந்தை திருப்பியபோது, கரூரில் இருந்து சேலம் நோக்கி வேகமாக வந்த லாரி மோதியதில் பள்ளி பேருந்தின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. இதில் ஓட்டுநரான வகுரம்பட்டியைச் சோ்ந்த குப்புசாமி (77) என்பவா் பலத்த காயமடைந்தாா். அவ்வழியாக சென்றோா் இடிபாடுகளில் சிக்கியிருந்த அவரை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பேருந்தில் பள்ளிக் குழந்தைகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து நல்லிபாளையம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்செனலின் 22 ஆண்டு சாபம் நீங்குமா? முக்கிய போட்டியில் மான்செஸ்டர் சிட்டியுடன் மோதல்!

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாதுகாப்புக் குறைவு: அஸ்ஸாம் எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடல்! திருப்பி அனுப்பப்பட்ட இந்திய கப்பல்கள்!

மோடியின் அகந்தை தோற்கடிக்கப்பட்டது: ரேவந்த் ரெட்டி
வீடியோக்கள்

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


