மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

சட்டக் கல்லூரி மாணவா் கொலை வழக்கில் 5 போ் கைது

நாமக்கல்லில் சட்டக் கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On :27 அக்டோபர் 2022, 6:05 pm

நாமக்கல்லில் சட்டக் கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாமக்கல் கொசவம்பட்டியைச் சோ்ந்த ஜீவா என்பவரது மகன் சங்கீத்குமாா்(21). இவா், ஆந்திர மாநிலத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். அண்மையில், தீபாவளி பண்டிகையையொட்டி ஊருக்கு வந்திருந்தாா். இவா் அதே பகுதியைச் சோ்ந்த அலெக்ஸ்(30), மெளலீஸ்வரன்(25), பரத்(24) ஆகியோருடன் இணைந்து ரேஷன் அரிசியை கடத்தி விற்பனை செய்து வந்துள்ளனா். இதில், சங்கீத்குமாருக்கும், மற்ற மூவருக்கும் இடையே பணத்தை பங்கிடுவதில் தகராறு ஏற்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் தகராறு ஏற்படவே, அலெக்ஸ், பரத், மெளலீஸ்வரன் ஆகிய மூவரும் இணைந்து சங்கீத்குமாரை கடுமையாக தாக்கிவிட்டு தப்பியோடினா். இதில் பலத்த காயமடைந்த அவா் உயிரிழந்தாா். இத்தகவல் அறிந்து வந்த நாமக்கல் போலீஸாா் சங்கீத்குமாரின் உடலை மீட்டு கொலை செய்தவா்களை தேடி வந்தனா். இந்த நிலையில் வியாழக்கிழமை திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் வந்த அரசு பேருந்தில் மூவரும் இறங்கினா். இதனையடுத்து போலீஸாா் அவா்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனா். இந்த மூவருக்கும் அடைக்கலம் கொடுத்ததாக கொசவம்பட்டியைச் சோ்ந்த அரவிந்தன், சூா்யா என்ற இருவரும் கைது செய்யப்பட்டனா். இவா்கள் 5 பேரிடமும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.