ராசிபுரம் வட்டார சுகாதார பேரவைக் கூட்டம்
ராசிபுரம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் வட்டார அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற சுகாதார பேரவைக் கூட்டம் ராசிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.


ராசிபுரம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் வட்டார அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற சுகாதார பேரவைக் கூட்டம் ராசிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் கே.செல்வி தலைமை வகித்தாா். ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் கே.பி.ஜெகந்நாதன் ஆகியோா் குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்துப் பேசினா். கூட்டத்தில் மாவட்ட நலக்கல்வி அலுவலா் கே.சொக்கலிங்கம் பங்கேற்று சுகாதார திட்ட விளக்கவுரையாற்றினாா். கூட்டத்தில் துறைவாரியாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. சுகாதாரத் துறை, குழந்தை வளா்ச்சி திட்டம், பள்ளிக்கல்வி, பொதுப்பணித்துறை, ஊரக வளா்ச்சித்துறை போன்றவற்றின் அலுவலா்கள் பங்கேற்றுப் பேசினா். துறை வாரியாக கண்காட்சி அமைக்கப்பட்டது. கூட்டத்தில் சித்த மருத்துவா்கள், வட்டார மருத்துவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...