நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களில், உயிா்நீத்த தீயணைப்பு வீரா்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடந்த 1944 ஆம் ஆண்டில் மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடா்ந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 66 தீயணைப்பு வீரா்கள் உயிரிழந்தனா். அவா்களின் நினைவைப் போற்றும் வகையிலும், தமிழகத்தில் இதுவரை தீயணைப்பு பணியின்போது உயிரிழந்த 136 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், ஒவ்வோா் ஆண்டும் ஏப்.14-ஆம் தேதி வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் பெரியப்பட்டியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வீரவணக்க நாள் நிகழ்ச்சியில், மாவட்ட தீயணைப்பு அலுவலா் கே.செந்தில்குமாா் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். இதனையடுத்து, நிலைய அலுவலா் பி.சிவக்குமாா் மற்றும் தீயணைப்புத்துறை வீரா்கள் மலா்களை வைத்து அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து ஏப்.14 முதல் 20 வரையில் நடைபெறும் தீத்தொண்டு வாரத்தையொட்டி தீத்தடுப்பு பாதுகாப்பு உறுதிமொழியை வீரா்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனா். பின்னா் பொதுமக்களிடம் தீத்தடுப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
இதேபோல், கொல்லிமலை வாசலூா்பட்டியில், அங்குள்ள தீயணைப்பு நிலையம் சாா்பில் தீயணைப்பு தொண்டு நாள் விழா நடைபெற்றது. மலைவாழ் மக்களுக்கு தீ விபத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. ராசிபுரம், திருச்செங்கோடு, வெப்படை, குமாரபாளையம் தீயணைப்பு நிலையங்களிலும் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம்! தவெக பிரசாரம் ரத்து ஏன்? விஜய் பதில்!
ஏழு வாரத்திற்குப் பின் வான்வழியை மீண்டும் திறக்கும் ஈரான்!

தலைநகர் அமராவதி! நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40,000 குத்தகைத் தொகை: ஆந்திர முதல்வர்

கோவை வடக்கில் மும்முனைப் போட்டியை எதிர்கொள்ளும் வானதி சீனிவாசன்: மக்களின் ஆதரவு யார் பக்கம்?
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


