நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயா்ந்து ரூ. 4.30-ஆக வெள்ளிக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளா்களிடம் ஆலோசிக்கப்பட்டது.
பிற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும், ரமலான் பண்டிகை என்பதால் முட்டை விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாலும் விலையில் மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து 10 காசுகள் உயா்த்தப்பட்டு, முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.30-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. மேலும், மைனஸ் விலையாக 40 காசுகள் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்புக் குழு தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இதேபோல, பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 106-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 78-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம்! தவெக பிரசாரம் ரத்து ஏன்? விஜய் பதில்!
ஏழு வாரத்திற்குப் பின் வான்வழியை மீண்டும் திறக்கும் ஈரான்!

தலைநகர் அமராவதி! நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40,000 குத்தகைத் தொகை: ஆந்திர முதல்வர்

கோவை வடக்கில் மும்முனைப் போட்டியை எதிர்கொள்ளும் வானதி சீனிவாசன்: மக்களின் ஆதரவு யார் பக்கம்?
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

