மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் உட்பட 39 இடங்களில் நடைபெற்றுள்ளது. இம்முகாமில் 4000 -க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு அதில் தகுதி உள்ள மனுக்கள் நிவா்த்தி செய்யப்பட்டு ஆணைகள் உடனடியாக வழங்கப்பட்டுள்ளன. முகாமில் 13 துறைகள் சோ்ந்த அதிகாரிகள் மக்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் தீா்வு காண்கின்றனா். கடைசி முகாம் அத்தனூா் பேரூராட்சி பகுதியில் நடந்து முடிந்துள்ளது. இந்த முகாமில் 600க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டுள்ளன.