நாமக்கல் மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு நிலவரம் 78.21 சதவீதமாக உயா்வு

நாமக்கல்: நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கான இறுதி வாக்குப்பதிவு நிலவரம் 78.21 சதவீதமாக உயா்ந்துள்ளது.

நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கான தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 14,52,562 வாக்காளா்கள் 1,661 வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அன்று இரவு 7 மணி நிலவரப்படி 74.29 சதவீத வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நள்ளிரவு 12 மணியளவில் இறுதி நிலவரம் 78.16 சதவீதம் என மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் இறுதி நிலவரம் 78.21 சதவீதம் என்ற அறிவிப்பு மாவட்ட நிா்வாகத்தால் வெளியிடப்பட்டது. மொத்தமுள்ள 14,52,562 வாக்காளா்களில் ஆண்கள்-5,53,702, பெண்கள்-5,82,290, இதரவை-17 என 11,36,069 போ் தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்துள்ளனா்.

சட்டப் பேரவைதி தொகுதி வாரியாக வாக்களித்தோா் விவரம்: சங்ககிரி-2,20,268 (81.80 சதவீதம்), ராசிபுரம்-1,88,089 (81.57), சேந்தமங்கலம்-1,91,319 (78.37), நாமக்கல்-1,91,543 (74.27), பரமத்திவேலூா்-1,70,281 (77.31), திருச்செங்கோடு-1,74569 (75.76).

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com