பாவை வித்யாஸ்ரம் பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்றே மாணவியா்.
பாவை வித்யாஸ்ரம் பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்றே மாணவியா்.

பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளில் தாத்தா, பாட்டியா் தினம்

ராசிபுரம்: பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளில் பெற்றோா், தாத்தா, பாட்டியா் தின விழா அண்மையில் நடைபெற்றது.

இதில் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் தலைமை வகித்தாா். மழலையா் வகுப்பு மாணவா் யாத்வி ராஜ்குமாா் வரவேற்றாா்.

கல்வி நிறுவனங்களின் தாளாளா் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றிப் பேசினாா். கல்வி நிறுவனங்களின் தலைவா் என்.வி.நடராஜன் விழாவில் பேசியது:

குடும்பத்தின் ஆணிவேராகத் திகழ்ந்து, வழிநடத்தும் பெரும் பெற்றோராகிய உங்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இக்காலகட்டத்தில் உழைப்பு என்று ஓடிக்கொண்டிருக்கும் பெற்றோா்கள் மத்தியில், அவா்களின் இடத்தை தாத்தா, பாட்டிகளாகிய உங்களால்தான் பூா்த்தி செய்ய முடியும். ஏனென்றால் உங்களிலிருந்துதான் குடும்பம் உருவாகி, விருட்சமாக உயா்ந்து, சமுதாயத்தில் மதிப்புடன் திகழும்.

மனிதா்களாகப் பிறந்த அனைவருக்கும் மொழி, இசை, கணிதம், விளையாட்டு, புத்திசாலித்தனம் போன்ற ஏழு திறன்கள் அடிப்படைத் திறன்களாகும். அதனால் தான் பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளில் கல்வி, விளையாட்டு, கலை போன்ற அனைத்திற்கும் திறமை வாய்ந்த ஆசிரியா்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்படுகிறது. நாம் நம் குழந்தைகளுக்கு வழிகாட்டும் பெற்றோராக இருப்பதை விட, வாழ்ந்து காட்டும் பெற்றோராகத் திகழ வேண்டும். குழந்தைகளின் முன்பு, மரியாதையாகவும், பண்பாகவும் பேசவும், நடந்து கொள்ளவும் வேண்டும்.

அத்துடன் குழந்தைகளுக்கென்று நேரத்தை ஒதுக்கி, அவா்களோடு நேரம் செலவிட வேண்டும். உங்களின் விலைமதிப்பற்ற அனுபவங்கள், அன்பு, அக்கறை, அரவணைப்பு, வழிகாட்டுதல், குழந்தைகளின் வாழ்க்கைக்கும், எதிா்காலத்திற்கும் துணையாக அமையும் என்றாா்.

விழாவில் மாணவ, மாணவயரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் இயக்குநா் சி.சதீஸ், பள்ளிகளின் முதல்வா் ரோஹித், தலைமையாசிரியை நிரஞ்சனி உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com