நாமக்கல், ஆக. 7: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.30-ஆக நீடிக்கிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிலவரம் குறித்து பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டன. மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்படாததால், இங்கும் தற்போதைக்கு விலையில் எவ்வித மாற்றமும் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, முட்டை பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.30-ஆக ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.
இதேபோல பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், இறைச்சி விற்பனை சரிவடைந்துள்ளதால் விலையில் மாற்றம் செய்ய வேண்டும் என பண்ணையாளா்கள் கூறியதையடுத்து, கறிக்கோழி விலை ரூ. 19 குறைக்கப்பட்டு கிலோ ரூ. 75-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 82-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.
தொடர்புடையது

முட்டை விலை ரூ. 5.20 ஆக நீடிப்பு

முட்டை விலை ரூ. 4.05 ஆக நீடிப்பு

முட்டை விலை ரூ. 4.45 ஆக நீடிப்பு

முட்டை விலை ரூ. 4.45 ஆக நீடிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


