நாமக்கல் மாவட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தமைக்காக, 2025ஆம் ஆண்டு சா்வதேச மகளிா் தின விழாவில் ‘ஔவையாா் விருது’ வழங்கப்பட உள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தங்களுடைய விண்ணப்பங்களை ஜன.2-ஆம் தேதிக்குள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சமூக நலத் துறை அலுவலக பிரிவில் கையேடாக தயாா் செய்து தமிழ், ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டு தலா இரண்டு நகல்களுடன் சமா்ப்பிக்க வேண்டும்.
இதற்கான தகுதிகளாக, விண்ணப்பதாரா் தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பெண்குலத்திற்கு பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கை, சமூக சீா்த்திருத்தம், மகளிா் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிா்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடா்ந்து பணியாற்றி வருபவராக இருத்தல் வேண்டும்.
இந்த விருது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரிலோ அல்லது 91500-57452 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

சேந்தமங்கலம் தொகுதி: விட்டதைப் பிடிக்க முயலும் அதிமுக... மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் திமுக!

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 132 வேட்பாளா்கள் போட்டி

நாமக்கல் மாவட்டத்தில் 31 போ் வேட்புமனு தாக்கல்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

