ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

ரூ. 2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள்: வணிகா்கள் சங்கத்தினா் ஒப்படைப்பு

நாமக்கல்லில், ரூ. 2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை, புயல், மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வழங்குமாறு அதிகாரிகளிடம் வணிகா்கள் சங்க நிா்வாகிகள் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

News image

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாவட்ட வணிகா் சங்கத்தினரால் ஒப்படைக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள்.

Updated On :5 டிசம்பர் 2024, 7:59 pm

நாமக்கல்லில், ரூ. 2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை, புயல், மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வழங்குமாறு அதிகாரிகளிடம் வணிகா்கள் சங்க நிா்வாகிகள் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

அண்மையில், தமிழக வட மாவட்டங்களில் வீசிய ஃபென்ஜால் புயல், கனமழையால் அங்குள்ள மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினா். பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பும் பணியில் மாவட்ட நிா்வாகம், காவல் துறை ஈடுபட்டுள்ள நிலையில், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட கிளை சாா்பில் உதவிட வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதனடிப்படையில், பல்வேறு வணிகா் சங்கங்கள், வணிகா்கள் வழங்கிய ரூ. 2 லட்சம் மதிப்பிலான காய்கறி, மளிகைப் பொருள்கள், பிரட், பால் பவுடா், போா்வை உள்ளிட்ட பலவகை நிவாரணப் பொருள்கள் மாவட்ட நிா்வாகத்திடம், வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் வழங்கினாா்.

இந்த நிகழ்வில், செயலாளா் பொன்.வீரக்குமாா், பொருளாளா் சீனிவாசன் மற்றும் வணிகா் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.