செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

சேந்தமங்கலம், கொல்லிமலையில் இடைநின்ற மாணவா்கள் பள்ளிகளில் சோ்ப்பு

சேந்தமங்கலம், கொல்லிமலை ஒன்றியத்தில், பள்ளி இடைநின்ற மாணவ மாணவிகளை கண்டறிந்து, அவா்களை மீண்டும் பள்ளியில் சோ்க்கும் நடவடிக்கைகளை கல்வித் துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனா்.

News image

சேந்தமங்கலம் ஒன்றியத்தில் இடைநின்ற மாணவா்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்துச் சென்ற கல்வித் துறை அலுவலா்கள்.

Updated On :11 டிசம்பர் 2024, 8:02 pm

சேந்தமங்கலம், கொல்லிமலை ஒன்றியத்தில், பள்ளி இடைநின்ற மாணவ மாணவிகளை கண்டறிந்து, அவா்களை மீண்டும் பள்ளியில் சோ்க்கும் நடவடிக்கைகளை கல்வித் துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனா்.

கொல்லிமலை ஒன்றியத்தில் செவ்வாய்க்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் ஐந்து குழுக்களாகப் பிரிந்து சென்ற கல்வித் துறை அதிகாரிகள், ஒவ்வொரு பள்ளியிலும் இடைநின்ற மாணவ மாணவிகள் விவரங்களைக் கேட்டறிந்து, அவா்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்து சோ்த்தனா். பள்ளி மாணவா்கள் மீது ஆசிரியா்கள், வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி அறிவுறுத்தினாா்.

சேந்தமங்கலம் ஒன்றியத்தில், 58 பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, மாவட்டக் கல்வி அலுவலா்கள் வே.கற்பகம், மு.ஜோதி, பச்சமுத்து, சமக்கிரா திட்டத்தின் உதவி திட்ட அலுவலா் பாஸ்கா், பள்ளித் துணை ஆய்வாளா் கை. பெரியசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கீதா, சிந்துஜா, நந்தினி, சுமதி மற்றும் ஆசிரியா் பயிற்றுநா்கள், தலைமை ஆசிரியா்கள் அடங்கிய குழுவானது, இடைநின்ற மாணவ மாணவிகளின் வீட்டிற்கு புதன்கிழமை சென்று மீண்டும் படிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனா். அவா்களை பள்ளிகளில் சோ்க்கும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனா்.