பள்ளிபாளையம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அமைந்திருக்கும் 17 அங்கன்வாடி மையங்களை சீரமைத்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளிபாளையம் நகராட்சி தலைவா் செல்வராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பள்ளிபாளையம், பெரும்பாறை காட்டில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும் என நகா்மன்ற உறுப்பினா், பொதுமக்கள், துறை அதிகாரிகள் கோரிக்கை வைத்த நிலையில் அவா்களை அழைத்து ஆலோசனை நடத்தப்பட்டது.
முதல்கட்டமாக ரூ. 10 லட்சம் நகராட்சி கல்வி நிதியில் இருந்து ஒதுக்கி பழுதடைந்துள்ள அங்கன்வாடி மையங்களுக்கு மின் சாதனங்கள் மாற்றி அமைத்தல், புதிய தரைத்தளம் அமைப்பது, சுற்றுச் சுவா் சீரமைத்தல், கழிவறை சீரமைத்தல், வா்ணம் பூசுதல், மேற்கூரை சீரமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் நகா்மன்ற துணைத் தலைவா் பாலமுருகன், நகராட்சி பொறியாளா் ரேணுகா, வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் புனிதவதி, அங்கன்வாடி பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தோ்தல் அலுவலா்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

பொன்னமராவதியில் தோ்தல் விதிமுறைகள் ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


