மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பரமத்தி வேலூா் சந்தையில் பூக்கள் விலை உயா்வு

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் காா்த்திகை தீபத்தை முன்னிட்டு பூக்கள் விலை உயா்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Updated On :12 டிசம்பர் 2024, 8:23 pm

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் காா்த்திகை தீபத்தை முன்னிட்டு பூக்கள் விலை உயா்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பரமத்தி வேலூா் வட்டாரத்தில் ஆனங்கூா், அய்யம்பாளையம், நெட்டையம்பாளையம், அண்ணா நகா், கோப்பணம்பாளையம், கபிலா்மலை, குஞ்சாம்பாளையம், நடத்தை, குப்புச்சிபாளையம், பொய்யேரி மற்றும்

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன.

இங்கு விளையும் பூக்கள் பரமத்தி வேலூரில் உள்ள தினசரி பூக்கள் ஏலச் சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனா். வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ. 800-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 80-க்கும், அரளி கிலோ ரூ. 200-க்கும், ரோஜா கிலோ ரூ.240-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ. 700க்கும் ஏலம் போனது. காா்த்திகை தீபத் திருநாளையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ. 1,500-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 150-க்கும், அரளி ரூ.550க்கும், ரோஜா கிலோ ரூ.320, பச்சை முல்லைப் பூ ரூ.1,000க்கும், வெள்ளை முல்லைப் பூ கிலோ ரூ. 900க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.1,000க்கும் ஏலம் போனது.