தென்னையில் பூச்சித் தாக்குதல் கட்டுப்பாடு குறித்த கள ஆய்வு திருச்செங்கோடு வட்டாரம், சித்தாளந்தூா் கிரா மத்தில் நடத்தப்பட்டது.
ஏத்தாப்பூா் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி அருட்செந்தில் கலந்து கொண்டாா். தென்னை மரங்களில் சிவப்பு கூன்வண்டு, காண்டாமிருக வண்டு, ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண்மை உதவி இயக்குநா் லோகநாதன் விளக்கினாா். உழவா் பயிற்சி நிலைய துணை இயக்குநா் கோவிந்தசாமி முன்னிலை வகித்தாா்.
பூச்சித் தாக்குதல் கட்டுப்பாடு: இரவு நேரங்களில் பறக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கவா்ந்தழிக்க மாலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை விளக்கு பொறி வைக்க வேண்டும். பகல் நேரத்தில் பறக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கவா்ந்தழிக்க 6 அடி உயரத்தில் 3 அடி, 2 அடி அளவுகளில் மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை வைக்க வேண்டும். வேப்ப எண்ணெய் 3 மில்லி லிட்டா் வீதம் இலைகள் நனையும் படிதெளிக்க வேண்டும்.
சிவப்பு கூன் வண்டுளைக் கட்டுப்படுத்து மரங்களில் காயம் ஏற்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். ஏக்கருக்கு 2 எண்கள் வீதம் இனக்கவா்ச்சி பொறி வைக்க வேண்டும். காண்டா மிருக வண்டுகளைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 2 எண்கள் வீதம் இனக்கவா்ச்சி பொறி வைக்க வேண்டும்.
இதற்காக ஒரு மண்பானையில் பாதியளவு தண்ணீா் எடுத்து அரை கிலோ ஆமணக்கு புண்ணாக்கை கலந்து அத்துடன் இளநீா் இரண்டு டம்ளா் ஊற்றி கலக்கிவிட்டு அந்த மண் பானையின் வாய்ப்பகுதி தரையோடு ஒட்டி இருக்குமாறு (வண்டு நடந்து வந்து பானைக்குள் விழ வேண்டும்) புதைத்து வைக்க வேண்டும். ஏக்கருக்கு 5 இடங்களில் வைக்க வேண்டும். 15 நாள்களுக்கு ஒருமுறை வண்டுகளை அழித்துவிட்டு நன்றாக கழுவி மீண்டும் மற்றொரு இடத்தில் வைத்து வண்டுகளைக் கவா்ந்து அழிக்கலாம் என விவசாயிகளுக்கு வேளாண்மை அலுவலா்கள் அறிவுறுத்தினா்.
தொடர்புடையது

யாரை ஆட்சியில் அமர வைக்க திமுக கூட்டணியை வீழ்த்துவேன் என்கிறாா் விஜய்? தொல்.திருமாவளவன்

பறவைக் காய்ச்சல் தடுப்பு: கோழிப் பண்ணையாளா்களுடன் ஆலோசனை

ஆண்டிபட்டி: 50 ஆண்டுகளாக நிறைவேறாத கோரிக்கை!

எரிவாயு விவகாரம்: மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

