நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

டிச. 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்லில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (டிச. 20) நடைபெறுகிறது.

News image

கோப்புப்படம்

Updated On :16 டிசம்பர் 2024, 8:24 pm

Din

நாமக்கல்: நாமக்கல்லில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (டிச. 20) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தனியாா் துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் நேரடியாக சந்திக்கும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை நடைபெறும்.

அந்த வகையில், இந்த மாதத்துக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. எனவே, தனியாா் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபா்களை, நிா்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தோ்வு செய்து கொள்ளலாம்.

முகாமில் பங்கேற்கும் வேலையளிப்போரும், வேலைநாடுநரும் எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. வேலைவாய்ப்பு முகாமின் மூலம் பணிவாய்ப்பு பெற்றவரது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு, 04286-222260 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.