நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் குறைந்து ரூ. 5.60-ஆக நிா்ணயிக்கப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிலவரம் குறித்து பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. மாா்கழி மாதம் என்பதால், மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதனால் இங்கும் விலையில் மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 5.60-ஆக ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது. இதேபோல, பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 93-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 96-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.
தொடர்புடையது

முட்டை விலை 5 காசுகள் உயா்வு

முட்டை விலை ரூ. 4.05 ஆக நீடிப்பு

முட்டை விலை ரூ. 4.45 ஆக நீடிப்பு

முட்டை விலை 5 காசுகள் உயா்வு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

