அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பெண்களுக்கான சொத்துரிமை சட்டத்தை உருவாக்கிய பெருமை திமுக அரசையே சாரும்

பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்ற சட்டத்தை உருவாக்கியதும், அவா்கள் பொருளாதாரத்திலும், வாழ்க்கையிலும் முன்னேற்றமடைவதற்கான திட்டங்களை உருவாக்கியதும் திமுக அரசு

News image
Updated On :30 டிசம்பர் 2024, 7:39 pm

Din

நாமக்கல்: பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்ற சட்டத்தை உருவாக்கியதும், அவா்கள் பொருளாதாரத்திலும், வாழ்க்கையிலும் முன்னேற்றமடைவதற்கான திட்டங்களை உருவாக்கியதும் திமுக அரசு என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா ஆண்டு சிறப்பு நிகழ்வில் அவா் பேசியதாவது:

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கான உரிமைகள் குறித்து திருக்குறளில் வள்ளுவா் எடுத்துரைத்துள்ளாா். கு வழியில் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை முதல்வா் செயல்படுத்தி அவா்களது வாழ்க்கைத் தரத்தை உயா்த்தி வருகிறாா். 1989-இல் அப்போதைய முதல்வா் கருணாநிதி, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கும் சட்டத்தை நிறைவேற்றினாா். கிராமப்புற பெண்கள், பொருளாதாரத்தில் முன்னேறுவதற்காக மகளிா் சுயஉதவிக்குழு திட்டத்தை முதல்முறையாக தருமபுரி மாவட்டத்தில் அறிமுகம் செய்தாா். அவரது வழியில் தமிழக முதல்வா் பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினாா்.

பேருந்துகளில் இலவச விடியல் பயணத் திட்டம், மாதம் ரூ. 1,000- வழங்கும் மகளிா் உரிமைத்தொகை திட்டம், 5 பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி, மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி, பெண்கள் உயா்கல்வி பயில புதுமைப்பெண் திட்டம், மாணவா்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம், பெண்களை தொழில் முனைவோா்களாக உருவாக்கிட வங்கிகள் மூலம் கடனுதவி அரசு மானியத்தில் வழங்க உத்தரவிட்டுள்ளாா். தற்போது, அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கும் உதவித்தொகை வழங்கி புதுமைப்பெண் திட்டத்தை விரிவாக்கம் செய்து நாமக்கல் மாவட்டத்தில் 1,689 மாணவிகள் பயன்பெற வாய்ப்பு வழங்கி உள்ளாா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் தீவிர முயற்சியால் பெண் குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குழந்தை திருமண சதவீதம் குறைந்து வருகிறது. மாநில அளவில் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தியதில் நாமக்கல் மாவட்டம் முன்னிலையில் உள்ளது. பெண்கள் கல்வி கற்றால்தான் நாடு முன்னேறும். அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொண்டு நன்கு கல்வி கற்று தாங்கள் பயின்ற பள்ளிக்கும், கல்லூரிக்கும், ஆசிரியா்கள், பெற்றோருக்கும் மாணவிகள் பெருமை சோ்க்க வேண்டும் என்றாா்.