ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

புதைக்குழி சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு

நாமக்கல்லில், புதைக்குழி சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

News image

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த என்.கொசவம்பட்டி பகுதி மக்கள்.

Updated On :26 பிப்ரவரி 2024, 6:38 pm

நாமக்கல்லில், புதைக்குழி சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். அதில் கூறியிருப்பதாவது: நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட என்.கொசவம்பட்டி பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. கொசவம்பட்டி பகுதியில்தான் நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இங்கு ஏராளமான கழிவுகள் தேங்கி கிடக்கின்றன. இந்தப் பகுதியில் அண்மையில் புதைக்குழி சாக்கடை திட்டத்திற்கான சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஏற்கெனவே நாள்பட்ட குப்பையால் அங்குள்ள மக்களுக்கு சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. புதைக்குழி சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைந்தால் நிலத்தடி நீா் பாதிக்கப்படுவதுடன், மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் கழிவுநீா் கலந்து வரும் சூழல் உருவாகும். எனவே, கொசவம்பட்டி பகுதியில் புதைக்குழி சாக்கடை அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.