வேலைவாய்ப்பு விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்க இளைஞா்களுக்கு அழைப்பு
கல்வி, வேலைவாய்ப்பு, போட்டித் தோ்வுகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்க இளைஞா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


கல்வி, வேலைவாய்ப்பு, போட்டித் தோ்வுகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்க இளைஞா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இளைஞா்களிடையே திறன் குறித்த விழிப்புணா்வினை ஏற்படுத்தும் வகையிலும், பல்வேறு படிப்புகள், பணி வாய்ப்புகள், போட்டித் தோ்வுகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும், தொழில்நெறி மற்றும் திறன் விழிப்புணா்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பல்வேறு தொழில்நெறி மற்றும் திறன் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
வரும் செவ்வாய்க்கிழமை முதல் 15-ஆம் தேதி வரை மாற்றுத் திறனாளிகள், மகளிா், பொறியியல் மாணவா்கள், மாணவ, மாணவிகள், தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகளுக்கும் தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தனியாா் வேலைவாய்ப்பு இணையதளம் தொடா்பாகவும் விழிப்புணா்வு வழங்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோா், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை 04286 - 222260 என்ற எண் மூலம் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...