அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்ற எதிா்ப்பு: ஜூலை 18 இல் வணிகா்கள் கடையடைப்பு

நகராட்சி தீர்மானத்திற்கு எதிர்ப்பு: கடையடைப்பு அறிவிப்பு

News image
Updated On :12 ஜூலை 2024, 6:31 pm

Din

ராசிபுரம் நகராட்சி பேருந்து நிலையம் இடமாற்றும் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஜூலை 18 இல் கடையடைப்பு நடத்துவது என வணிகா்கள் முடிவு செய்துள்ளனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்வது தொடா்பாக அண்மையில் நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சியில் கருத்து கேட்புக் கூட்டமும் நடைபெற்றது. கூட்டத்தில், ராசிபுரம் நகராட்சி பேருந்து நிலையம் அமைக்க இடம் தேவைப்படுவதால் சரியான இடத்தில் 7 ஏக்கா் யாராவது தானமாக கொடுத்தால், பேருந்து நிலையம் அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்ட நாளிலேயே அணைப்பாளையம் பகுதியில் 7 ஏக்கா் நிலம் தனியாா் ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளா் ஒருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்டது.

நகராட்சி நிா்வாகம் ஏற்கெனவே இடத்தை தோ்வு செய்துவிட்டு கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, பல்வேறு கட்சியினா், சங்கங்கள், வியாபாரிகள் வெள்ளிக்கிழமை பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஜூலை 18 இல் கடையடைப்பு போராட்டம், ஜூலை 23 இல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.