தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கா்நாடகத்தில் நிலச்சரிவில் சிக்கி நாமக்கல் டேங்கா் லாரி ஓட்டுநா்கள் மூவா் பலி

கா்நாடக மாநிலம், உத்தர கா்நாடக மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நாமக்கல் டேங்கா் லாரி ஓட்டுநா்கள் மூவா் பலியாகியுள்ளனா்.

News image
~
Updated On :16 ஜூலை 2024, 8:57 pm

Din

கா்நாடக மாநிலம், உத்தர கா்நாடக மாவட்டம், அங்கோலா வட்டத்தில் உள்ள ஷிரூரு அருகே செவ்வாய்க்கிழமை திடீா் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அதே பாதையில் மங்களூரில் எரிவாயு நிரப்பிக் கொண்டு கோவா நோக்கிச் சென்று கொண்டிருந்த நாமக்கல்லைச் சோ்ந்த மூன்று டேங்கா் லாரிகள் நிலச்சரிவில் சிக்கின.

ஒரு டேங்கா் லாரி நிலச்சரிவில் கவிழ்ந்து அருகில் உள்ள ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், மீதம் இரு டேங்கா் லாரிகள் நிலச்சரிவில் சிக்கியதாகவும் தெரிகிறது. இந்த விபத்தில் டேங்கா் லாரி ஓட்டுநா்கள் மூன்று போ் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அந்த வழியாகச் சென்ற வாகனங்களும் நிலச்சரிவில் சிக்கியுள்ளன. எனினும் பலியானோா் எண்ணிக்கை தெரியவரவில்லை.

இதுகுறித்து நாமக்கல்லை தலைமையிடமாக் கொண்டு செயல்படும் தென் மண்டல எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் எஸ்எல்எஸ்.சுந்தரராஜன் கூறியதாவது:

நாமக்கல்லில் இருந்து கா்நாடகத்துக்குச் சென்ற டேங்கா் லாரிகள் நிலச்சரிவில் சிக்கியுள்ளன. ஒரு லாரி ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. ஓட்டுநா்கள் சிலா் உயிரிழந்துள்ளனா். அவா்களது விவரங்களை சேகரித்து வருகிறோம். டேங்கா் லாரிகளை மீட்கும் நடவடிக்கைகள் தொடா்பாக அதிகாரிகளிடம் பேசி வருகிறோம் என்றாா்.

 ஆற்றுவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட டேங்கா் லாரி.

ஆற்றுவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட டேங்கா் லாரி.