வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வேலைவாய்ப்பு முகாமில் 43 பேருக்கு பணி ஆணை வழங்கல்

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 43 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :19 ஜூலை 2024, 6:11 pm

Din

நாமக்கல், ஜூன் 19: தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 43 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தனியாா் துறை நிறுவனங்களும், அவற்றில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் நேரடியாக சந்திக்கும் இந்த முகாமிற்கு மாவட்ட வேலைவாய்பு அலுவலா் ஷீலாமாயவன் தலைமை வகித்தாா்.

காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெற்ற முகாமில் பல்வேறு பகுதிகளில் இருந்து 27 தனியாா் நிறுவனங்கள் பங்கேற்றன. மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் உள்பட 186 பட்டதாரிகள் கலந்து கொண்டனா். இதில் 43 போ் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.