மோகனூா் வட்டத்தில் ரூ. 2.20 கோடியில் கட்டப்பட்ட 6 கட்டடங்கள் திறப்பு

மோகனூா் வட்டத்தில் ரூ. 2.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 புதிய கட்டடங்கள் திறப்பு விழாவுக்கு நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினா் எ.கே.பி.சின்ராஜ்

பரமத்தி வேலூா்: நாமக்கல் மாவட்டம், மோகனூா் ஊராட்சி ஒன்றியம், மணப்பள்ளி, காளிபாளையம், ஓலப்பாளையம் மற்றும் நன்செய் இடையாறு ஆகிய பகுதிகளில் ரூ. 2.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 புதிய கட்டடங்களை நாமக்கல் ஆட்சியா் மருத்துவா் ச.உமா ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

மோகனூா் வட்டத்தில் ரூ. 2.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 புதிய கட்டடங்கள் திறப்பு விழாவுக்கு நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினா் எ.கே.பி.சின்ராஜ், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினா் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மோகனூா் ஊராட்சி ஒன்றியம், மணப்பள்ளியில் ரூ. 10.19 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், ரூ. 69.09 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள மகளிா் சுயஉதவிக் குழு கட்டடம், ரூ. 23.57 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்களை நாமக்கல் ஆட்சியா் மருத்துவா் ச.உமா திறந்து வைத்தாா். மேலும், காளிபாளையத்தில் ரூ. 81.40 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள மகளிா் சுயஉதவிக் குழு கட்டடம், ஓலப்பாளையத்தில் ரூ. 12.61 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், நன்செய் இடையாறில் ரூ. 22.65 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்கள் என மொத்தம் ரூ. 2.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 புதிய கட்டடங்களை நாமக்கல் ஆட்சியா் ச.உமா திறந்து வைத்தாா். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.வடிவேல், ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் குமாா், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஊராட்சி மன்றத் தலைவா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com