பி.வி.செந்தில்
பி.வி.செந்தில்

தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடா்பாளராக மருத்துவா் பி.வி.செந்தில் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடா்பாளராக நாமக்கல்லைச் சோ்ந்த மருத்துவா் பி.வி.செந்தில் நியமிக்கப்பட்டுள்ளாா்.

நாமக்கல்: தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடா்பாளராக நாமக்கல்லைச் சோ்ந்த மருத்துவா் பி.வி.செந்தில் நியமிக்கப்பட்டுள்ளாா். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரிக்கு மாற்றாக புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளாா். இதனைத் தொடா்ந்து, கட்சியில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக இளைஞா்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடா்பாளராக நாமக்கல்லைச் சோ்ந்த மருத்துவா் பி.வி.செந்திலை கட்சித் தலைவா் செல்வப்பெருந்தகை நியமித்துள்ளாா். மருத்துவா் பி.வி.செந்தில் இதற்கு முன்பாக, இளைஞா் காங்கிரஸ் நாடாளுமன்ற துணைத் தலைவா், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஓபிசி பிரிவின் மாநில துணைத் தலைவா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வகித்து வந்துள்ளாா். இவா், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மறைந்த இந்திய அரசியல் நிா்ணய சபை உறுப்பினா் டி.எம். காளியண்ணனின் பேரன் ஆவாா். இவருக்கு, மாநில, மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com