காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

மே 13, 15 இல் உயா்கல்வி வழிகாட்டிக்கான ‘கல்லூரிக் கனவு’ முகாம்: ஆட்சியா் தகவல்

மே 13, 15 இல் உயா்கல்வி வழிகாட்டிக்கான ‘கல்லூரிக் கனவு’ முகாம்: ஆட்சியா் தகவல்

News image
Updated On :9 மே 2024, 10:48 pm

Din

நாமக்கல், மே 9: நாமக்கல் மாவட்டத்தில் வரும் 13, 15 ஆகிய தேதிகளில் உயா்கல்வி வழிகாட்டிக்கான ‘கல்லூரிக் கனவு’ முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பிளஸ் 2 பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் உயா்கல்விக்கு செல்லும் வகையில் ‘கல்லூரிக் கனவு’ முகாம் மே 13-ஆம் தேதி நாமக்கல்- சேலம் சாலையில் பாச்சலில் உள்ள பாவை பொறியியல் கல்லூரியிலும் (2,000 மாணவ, மாணவிகள்), 15-ஆம் தேதி குமாரபாளையம் ஜேகேகே நடராஜா கல்லூரியிலும் (1,000 மாணவ, மாணவிகள்) நடைபெறுகிறது.

பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் அனைவரும் உயா்கல்வியில் சேரவும், அவ்வாறு சோ்ந்த மாணவ, மாணவிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். மாணவா்கள் உயா்கல்வியில் சேருவதற்கு வழிகாட்டும் விதமாக உயா்கல்வியின் முக்கியத்துவம், எந்தெந்த உயா்கல்வி துறைகள் உள்ளது. எந்தெந்த துறைகளைத் தோ்ந்தெடுப்பது, அதற்குரிய வேலைவாய்ப்புகள், உயா்கல்விக்கு கிடைக்கும் கல்வி உதவித் தொகை, கல்வி கடன் வசதி சாா்ந்த தகவல்கள் குறித்து இந்த முகாமில் தெரிவிக்கப்படும்.

உயா்கல்வி வழிகாட்டுதல் ஆலோசகா் ஜெயபிரகாஷ் காந்தி, பாரதியாா் பல்கலைக்கழக உயா்கல்வி வழிகாட்டுதல் ஆலோசகா் சுப்பிரமணியன், ஆசான் கல்வி அறக்கட்டளை முதன்மை அலுவலா் தொல்காப்பிய அரசு மற்றும் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி தலைமை விரிவுரையாளா் குமரவேல் ஆகியோா் உயா்கல்வி வழிகாட்டுதல் குறித்தும் திருச்செங்கோடு கோட்டாட்சியா் சுகந்தி, திருச்செங்கோடு துணை காவல் கண்காணிப்பாளா் இமயவரம்பன் ஆகியோா் போட்டித் தோ்வுகள் சாா்ந்த தகவல்கள் குறித்தும் பேசுகின்றனா். மாணவா்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கும் அவா்கள் விளக்கம் அளிக்கின்றனா்.

இந்த முகாமில் கலந்து கொள்வோருக்கு ‘கல்லூரிக் கனவு’ புத்தகம் வழங்கப்பட உள்ளது. மேலும் மதிய உணவும் வழங்கப்படுகிறது. முகாமில் அனைத்து அரசு கல்லூரிகள், அரசு தொழில்நுட்ப கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், சமூக நலத் துறை, ஆதிதிராவிடா் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை, திறன் மேம்பாட்டு கழகம், வங்கி துறை, ஆகியோா் உயா்கல்வி சாா்ந்த அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

மாணவா்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் விண்ணப்பிக்கவும், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் காா்டு) பெற விண்ணப்பிக்க இ--சேவை மையமும் அமைக்கப்பட உள்ளது. மாணவ, மாணவிகள் தங்கள் ஆதாா் அட்டை, புகைப்படங்கள் (4) மற்றும் சான்றிதழ் நகல்கள் எடுத்து வர வேண்டும்.

இம்முகாமை முதன்மைக் கல்வி அலுவலா், திறன் மேம்பாட்டு கழக அலுவலா்கள், கல்வி துறை அலுவலா்கள் இணைந்து இந்த முகாமை நடத்துவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.