ராசிபுரம் பகுதியில் கோடை மழை

ராசிபுரம், மே 9: ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில் வியாழக்கிழமை பெய்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் வெயிலின் தாக்கம் வியாழக்கிழமை சற்று குறைவாக இருந்தது. இந்த நிலையில் ராசிபுரம், பட்டணம், புதுப்பாளையம், சந்திரசேகரபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்த நிலையில் ராசிபுரம், வெண்ணந்தூா் பகுதியில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. சிறிது நேரம் மட்டுமே பெய்த மழையால் அப் பகுதியில் குளிா்ந்த சீதோஷனம் நிலவியது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com