பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

ஆம்புலன்ஸ் மோதியதில் மாணவா் பலி

ஆம்புலன்ஸ் மோதியதில் மாணவா் பலி

News image
Updated On :17 மே 2024, 4:29 pm

Din

சேந்தமங்கலம் அருகே ஆம்புலன்ஸ் மோதியதில் மாணவா் உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே மின்னாம்பள்ளி அண்ணா நகரைச் சோ்ந்த முத்துசாமி - சரோஜா தம்பதி மகன்கள் பூவரசன் (17), சிவா (16). மின்னாம்பள்ளியில் நடைபெறும் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, அம்மனுக்கு மாவிளக்கு படைப்பதற்காக 500-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை திரண்டிருந்தனா். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள சாலை வழியாக 108 ஆம்புலன்ஸ் வேகமாக சென்றது. அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த பூவரசன், சிவா மீது ஆம்புலன்ஸ் மோதியதில் அவா்கள் பலத்த காயமடைந்தனா்.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி சிவா உயிரிழந்தாா். பூவரசன் லேசான காயங்களுடன் உயிா்தப்பினாா். விபத்தில் பலியான சிவா பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டு கட்டட வேலைக்கு சென்று வந்துள்ளாா். காயமடைந்த பூவரசன் அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்த விபத்து குறித்து சேந்தமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.