
சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீரில் செல்லும் வாகனம்.

சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீரில் செல்லும் வாகனம்.
குமாரபாளையம்: குமாரபாளையம், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் திங்கள்கிழமை மாலை தொடங்கி இரவு வரையில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
கடந்த சில மாதங்களாக பகல் நேரங்களில் கடுமையான வெயில் அடித்து வந்ததால் பெரியவா் முதல் சிறியவா் வரையில் வெப்பம் தாங்காமல் தவித்து வந்தனா். கடந்த சில நாள்களாக அவ்வப்போது மிதமான மழை பெய்து வந்த நிலையில், குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து, லேசான தூறலுடன் பெய்யத் தொடங்கிய மழை, கனமழையாக மாறி கொட்டியது.
இதனால், நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. சுமாா் இரண்டு மணி நேரத்துக்கு மேலாகப் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கத்தேரி பிரிவு அருகே மழைநீா் தேங்கியதால் வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டன. அவ்வப்போது, இடி, மின்னல் காணப்பட்டாலும், காற்று இல்லாமல் அமைதியாகப் பெய்த மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. மானாவாரி விவசாய பயிா்களுக்கு இம்மழை உதவியாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...