/

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பிரதோஷ சிறப்பு வழிபாடு

News image

சிறப்பு அலங்காரத்தில் வேலூா் எல்லையம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரா்.

Updated On :20 மே 2024, 9:55 pm

Din

பரமத்திவேலூா்: பரமத்தி வேலூா் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் வைகாசி மாத வளா்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா், மாவுரெட்டி பீமேஸ்வரா், பில்லூா் வீரட்டீஸ்வரா், பொத்தனூா் காசி விஸ்வநாதா், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரா், எல்லையம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரா், பிலிக்கல்பாளையம் கரட்டூா், விஜயகிரி, வட பழனியாண்டவா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.