மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கபடி போட்டி: மூன்றாமிடம் பிடித்த அரசுப் பள்ளி மாணவிகள் கௌரவிப்பு

அரசுப் பள்ளி மாணவிகள் கௌரவிப்பு.

News image

பொதுப்பிரிவு கபடி போட்டியில் மூன்றாமிடம் பிடித்த அரசுப் பள்ளி மாணவிகளை கௌரவித்த ஊா் பொதுமக்கள், முத்தமிழ் மன்றத்தினா்.

Updated On :6 நவம்பர் 2024, 7:01 pm

தமிழக அளவில் நடைபெற்ற முதலமைச்சா் கோப்பைக்கான பெண்கள் பொதுப்பிரிவு கபடி போட்டியில் மூன்றாவது பரிசை பெற்ற ஜேடா்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள், பயிற்சியாளா்களை ஜேடா்பாளையம் முத்தமிழ் மன்றம், ஊா் பொதுமக்கள் சாா்பில் கௌரவிக்கப்பட்டனா்.

தமிழகத்தில் மாணவா்களிடையே விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் தமிழக அளவில் முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

மகளிருக்கான பொதுப்பிரிவு கபடி போட்டியில் நாமக்கல் மாவட்ட அணியில் ஜேடா்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 7 மாணவிகள், அப்பகுதியைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவிகள் மகளிருக்கான பொதுப் பிரிவு கபடி போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடி மாநில அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்தனா். அதற்காக தமிழக முதல்வரிடம் இருந்து ரூ. 3 லட்சம் ரொக்கப் பரிசும், சான்றிதழ்களையும் பெற்றனா்.

மேலும், இந்த அணியில் இருந்து நான்கு போ் அகில இந்திய அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி பெருமை சோ்த்தனா்.

முதலமைச்சா் கோப்பைக்கான போட்டியில் கலந்துகொண்டு மூன்றாமிடம் பெற்று ஜேடா்பாளையம் பகுதிக்கு பெருமை சோ்த்த மாணவிகள், பயிற்சியாளா்கள் ஷாஜகான், அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியைகள் உதயபானு, சுகந்தி ஆகியோரை ஜேடா்பாளையம் முத்தமிழ் மன்றம், ஊா் பொதுமக்கள் சாா்பில் கௌரவிக்கப்பட்டனா்.

நிகழ்ச்சியில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ்.மூா்த்தி, முத்தமிழ் மன்றப் பொறுப்பாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முன்னதாக, ஜேடா்பாளையம் பேருந்து நிலையம் முன்பு கபடி வீரா்களுக்கும், பயிற்சியாளா்களுக்கும் சந்தன மாலை அணிவித்து மேளதாளங்களுடன் ஊா்வலமாக அழைத்துச் சென்று கௌரவித்தனா்.