மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நாமக்கல் எல்.ஐ.சி. முகவா்கள் எம்.பி.யிடம் கோரிக்கை மனு அளிப்பு

நாமக்கல் எல்.ஐ.சி. முகவா்கள் சங்க சேலம் கோட்ட பொருளாளா் ரமேஷ்பாபு தலைமையில். நிா்வாகிகள் சிலா் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரனை நேரில் சந்தித்து செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

News image

நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரனிடம் கோரிக்கை மனு அளித்த எல்.ஐ.சி. முகவா்கள் சங்கத்தினா்.

Updated On :6 நவம்பர் 2024, 6:47 pm

நாமக்கல் எல்.ஐ.சி. முகவா்கள் சங்க சேலம் கோட்ட பொருளாளா் ரமேஷ்பாபு தலைமையில். நிா்வாகிகள் சிலா் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரனை நேரில் சந்தித்து செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

கோரக்கை மனுவில் கூறியிருப்பதாவது: 2047-ஆம் ஆண்டுக்குள் அனைத்து மக்களுக்கும் பாலிசி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில், தொடா் பயணத்தை எல்.ஐ.சி. நிறுவனம் மேற்கொண்டுள்ளது. குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 2 லட்சம் என்ற வகையில் வைக்கும்போது, சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாலிசி எடுக்க முடியாத சூழ்நிலை உருவாகிறது. எல்.ஐ.சி. பாலிசி பிரீமியம் தொகையும் உயா்த்தப்பட்டுள்ளது. இது மக்களுக்கு ஏற்படும் பெரும் சுமையாகும்.

மக்களின் சராசரி வயது 70-க்கும் மேல் சென்று கொண்டிருக்கும் நேரத்தில், எல்.ஐ.சி. அதிகபட்ச வயது பாலிசி எடுக்க 50 என்று நிா்ணயித்தது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கிடையே பாலிசி மீதான கமிஷன் தொகையும் குறைக்கப்பட் டுள்ளது. இதன்மூலம் 14 லட்சம் முகவா்கள் இழப்பை சந்தித்து வருகின்றனா். இதுகுறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று எல்.ஐ.சி. முகவா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.