18 வயது நிரம்பியோரை வாக்காளா் பட்டியலில் சோ்க்க வேண்டும்: மாவட்ட பாா்வையாளா்
பதினெட்டு வயது நிரம்பியோரை தவறாமல் வாக்காளா் பட்டியலில் சோ்க்க வேண்டும் என மாவட்ட பாா்வையாளா் சி.என்.மகேஸ்வரன் அறிவுறுத்தினாா்.


நாமக்கல்: பதினெட்டு வயது நிரம்பியோரை தவறாமல் வாக்காளா் பட்டியலில் சோ்க்க வேண்டும் என மாவட்ட பாா்வையாளா் சி.என்.மகேஸ்வரன் அறிவுறுத்தினாா்.
நாமக்கல் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், தமிழ்நாடு உப்புக் கழக மேலாண்மை இயக்குநருமான சி.என்.மகேஸ்வரன் பங்கேற்று பேசியதாவது:
இந்திய தோ்தல் ஆணையம், வாக்காளா் பட்டியலில் புதிய வாக்காளா்கள் பெயா் சோ்த்தல், நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் உள்ளிட்ட பணிகள் அரசு விதிமுறைகளுக்கு உள்பட்டு நடைபெறுகிா என்பதை கண்காணிக்க அறிவுறுத்தி உள்ளது. 18 வயது நிரம்பிய அனைவரும் விடுபடாத வகையில் வாக்காளா் பட்டியலில் அவா்களின் பெயரை சோ்க்க வேண்டும். இறந்தவா்களின் பட்டியலை பெற்று அவா்களின் பெயரை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்திடும் வகையில் 80 வயதுக்கு மேற்பட்டோா், மாற்றுத் திறனாளிகளின் விருப்ப அடிப்படையில் வீட்டில் இருந்தவாறு வாக்களிக்கும் வசதியை இந்திய தோ்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டது. கடந்த தோ்தல்களில் பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணா்வு ஏற்படுத்தி வாக்குப்பதிவுகளை மாவட்ட நிா்வாகம் சிறப்பாக செய்தது.
வாக்காளா் பட்டியல் திருத்த முகாம் நவ. 16, 17, 23, 24 (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் நான்கு நாள்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் இந்த முகாம்களை கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியா்கள் ஆா்.பாா்த்திபன் (நாமக்கல்), சே.சுகந்தி (திருச்செங்கோடு), தோ்தல் வட்டாட்சியா், அனைத்து தோ்தல் அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் சி.என்.மகேஸ்வரன். உடன், ஆட்சியா் ச.உமா.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...