கால்நடைகளுக்கு நோய் பாதிப்பு: கிராமங்களில் மருத்துவ முகாம்கள்

கால்நடைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.
Published on

நாமக்கல்: கால்நடைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மோகனூா் கால்நடை மருந்தகத்திற்கு உள்பட்ட ராசிபாளையம் கிராமத்தில் 7 மாடுகள் அண்மையில் திடீரென இறந்த காரணத்தினால், ராசிபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.

அதன்படி, குமரிப்பாளையம் ஊராட்சிக்கு செவ்வாய்க்கிழமை (நவ.12) ஒருவந்தூா் கால்நடை மருந்தகத்திலும், புதன்கிழமை பனைமரத்துப்பட்டி ஊராட்சிக்கு, மோகனூரிலும், வியாழக்கிழமை சீத்தப்பட்டி ஊராட்சிக்கு, மோகனூரிலும், வெள்ளிக்கிழமை சின்னத்தம்பிபாளையம் ஊராட்சிக்கு, ஒருவந்தூரிலும், சனிக்கிழமை (நவ.16) மாமரத்துப்பட்டி ஊராட்சிக்கு, ஒருவந்தூரிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளன.

அதேபோல, திருச்செங்கோடு ஒன்றியம், தோக்கவாடியில் எல்.எஸ்.டி. நோய் அறிகுறிகள் தென்பட்டதால் மருத்துவ சிகிச்சை முகாம், தடுப்பூசி செலுத்தும் பணி கிராமங்களில் நடைபெற உள்ளது

அதன்படி, செவ்வாய்க்கிழமை (நவ.12) பழையபாளையம் ஊராட்சிக்கு, தோக்கவாடி கால்நடை மருந்தகத்திலும், புதன்கிழமை தச்சன்காட்டுபாளையம் ஊராட்சிக்கு, தோக்கவாடி, வியாழக்கிழமை செரமிட்டாம்பாளையம் ஊராட்சிக்கு ஆனங்கூரிலும், வெள்ளிக்கிழமை முப்பாட்டம்பாளையம் ஊராட்சிக்கு, ஆனங்கூரிலும், சனிக்கிழமை (நவ.16) கீழேரிப்பட்டி ஊராட்சிக்கு, ஆனங்கூா் கால்நடை மருந்தகத்திலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன.

இதில் கால்நடை வளா்ப்போா், பொதுமக்கள் தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி சிகிச்சை மேற்கொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com