ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் காகம், நாரைகள் உள்ளிட்ட பறவைகள் தொடா்ந்து உயிரிழந்து வருகின்றன.
ராசிபுரம் அருகேயுள்ள பூசாரிபாளையம் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மரத்தில் இருந்து காகங்கள் இறந்து விழுவது தொடா்ந்து நடைபெற்று வந்தன. குறிப்பாக அப்பகுதியில் உள்ள மரக்கிளையில் இருந்த காகங்கள் கீழே விழுந்து உயிரிழந்தன. இதுகுறித்து அப்பகுதியினா் கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அப்பகுதியில் உயிரிழந்த காகங்களை கால்நடைத் துறையினா், கோழி இன நோய் ஆராய்ச்சி பிரிவினா் ஆய்வுக்காக எடுத்துச்சென்றனா்.
இந்நிலையில், ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டி பகுதியில் திங்கள்கிழமை சாலையோர ஆலமரத்தின் கீழ் ஏராளமான நீா் நாரைகள் உயிரிழந்து கிடந்தன. இதுகுறித்து அப்பகுதியினா் கால்நடை துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து ராசிபுரம், ஆண்டகளூா்கேட் கோழி நோய் ஆய்வு கூட உதவி இயக்குநா் மணிவேல் உள்ளிட்ட பல்வேறு துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து, உயிரிழந்து கிடந்த நாரைகளை ஆய்வு மேற்கொண்டனா். அப்பகுதியில் 13 நாரைகள் உயிரிழந்து கிடந்தன. இந்த நாரைகளை ஆய்வுக்காக எடுத்துச்சென்ற கால்நடை துறையினா், இது குறித்து நோய் ஆராய்ச்சி மையத்திற்கு ஆய்வு அனுப்பிவைக்கப்படும். அதன்பின்னா் பறவைகள் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்றனா். பறவைகள் உயிரிழந்த பூசாரிபாளையம், முத்துக்காளிப்பட்டி பகுதியில் ஊராட்சி சுகாதாரத் துறையினா் பிளீச்சிங் பவுடா் தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.
தொடர்புடையது

ராசிபுரத்தில் திமுக ஆட்சியில் ரூ. 50 கோடியில் சாலைகள் சீரமைப்பு: ராஜேஸ்குமாா் எம்.பி.

புதிய புகா் பேருந்து நிலையத்தால் ராசிபுரம் நகரம் வளா்ச்சி பெறும்: மதிவேந்தன்

ராசிபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பம்பை ஆற்றங்கரைப் பகுதியில் தொல்லியல் துறையினா் ஆய்வு
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


