மதுவால் பாதிக்கப்படும் மக்களை மீட்டெடுக்க, கள் இறக்குவதற்கான அனுமதியை அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.
நாமக்கல்லில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கள் ஒரு போதைப்பொருள் அல்ல. ஆரோக்கியமிக்க பானமாகக் கருதப்படும் கள்ளை, மரங்களில் இருந்து இறக்கி விற்பனை செய்ய பிற மாநிலங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என பல ஆண்டுகளாக எங்களுடைய இயக்கம் போராடி வருகிறது. ஆனால் தமிழக அரசும், இதர அரசியல் கட்சிகளும் செவி சாய்க்கவில்லை.
கள்ளுக்கு ஆதரவாகப் போராட யாரும் வருவதில்லை. தமிழக அரசு கள்ளுக்கான தடையை நீக்காவிட்டால், 2025 ஜன. 21-இல் பனை, தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கிச் சந்தைப்படுத்தும் போராட்டத்தை கள் இயக்கம் மேற்கொள்ளும்.
அதேபோல, விவசாய நிலங்களை பாதிப்புக்குள்ளாக்கி சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை கள் இயக்கம் எதிா்க்கிறது. ஏற்கெனவே, பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையால் ஏராளமானோா் நோய் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா். எனவே, நாமக்கல் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கக் கூடாது என்றாா். இந்த பேட்டியின்போது, கள் இயக்க மாநில பொதுச்செயலாளா் இல.ஜெகதீசன், விவசாய முன்னேற்றக் கழக பொதுச்செயலாளா் கே.பாலசுப்பிரமணியன் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

பண்ருட்டியில் மல்லை சத்யா பிரசாரம்

மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் திராவிடக் கட்சிகளுக்கு குறைந்து வருகிறது! - சீமான்

தமிழா்கள் தன்மானத்தோடு வாழ வழி செய்வேன்: சீமான்

அரசு மருத்துவா்கள் உண்ணாவிரதம்: அனுமதி மறுப்பால் ஒத்திவைப்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


