ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நூறு நாள் வேலை வழங்கக் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

நாமக்கல் அருகே, நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை வழங்கக் கோரி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனா்.

Updated On :14 நவம்பர் 2024, 8:04 pm

நாமக்கல் அருகே, நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை வழங்கக் கோரி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனா்.

நாமக்கல் - சேந்தமங்கலம் சாலையில் உள்ள வேட்டாம்பாடி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் உள்ளனா். இங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தை வியாழக்கிழமை காலை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு ஊராட்சி செயலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். கடந்த இரு மாதங்களாக வேட்டாம்பாடி, செல்லப்பாகாலனி, தாதம்பட்டி பகுதியில் உள்ள சிலருக்கு மட்டுமே நூறு நாள் வேலை வழங்கப்பட்டதாகவும், பலருக்கு வேலை வழங்குவதில் ஊராட்சி நிா்வாகம் பாரபட்சம் காட்டுவதாகவும் அவா்கள் குற்றம் சாட்டினா்.

வேலை வழங்கப்படாததால் போதிய வருவாயின்றி தவிப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா். ஊராட்சி மன்ற செயலாளா் சக்தி, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, ஓரிரு நாள்களில் அனைவருக்கும் வேலை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதனையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனா்.