அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வேலூா் நூலகத்தில் தேசிய நூலக வார விழா

பரமத்தி வேலூா் வட்டம், வேலூா் நூலகத்தில் தேசிய நூலக வார விழா, வ.உ.சி.யின் 88-வது நினைவு தின நிகழ்ச்சியும் திங்கள்கிழமை நடைபெற்றன.

News image
நூலகத்துக்கு வ.உ.சி. உருவப்படம் வழங்கும் வாசகா் வட்டத்தினா்.
Updated On :18 நவம்பர் 2024, 9:19 pm

Din

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், வேலூா் நூலகத்தில் தேசிய நூலக வார விழா, வ.உ.சி.யின் 88-வது நினைவு தின நிகழ்ச்சியும் திங்கள்கிழமை நடைபெற்றன.

நூலக வாசகா் வட்ட தலைவா் ப.இளங்கோ நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தாா். நூலக அலுவலா் சாந்தி வரவேற்றாா். விழாவில் வீரமுருகன், அன்பழகன், வெங்கட், மருத அறிவாயுதம், முத்துகண்ணன், காா்த்திகேயன், இக்பால் உள்ளிட்ட வாசகா்கள் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டனா். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. யின் 88-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு நூலகத்துக்கு வழங்கப்பட்ட வ.உ.சி.யின் உருவ படத்துக்கு மலா்கள்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நூலக அலுவலா் வனிதா நன்றி கூறினாா்.