பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

திருச்செங்கோடு அம்மன் குளத்தில் ஆகாயத் தாமரை செடிகள் அகற்றம்

திருச்செங்கோடு, அம்மன் குளத்தில் ஆகாயத் தாமரை செடிகளை அகற்றும் பணியை நகராட்சி ஆணையா் திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.

News image
Updated On :18 நவம்பர் 2024, 8:15 pm

Din

திருச்செங்கோடு: திருச்செங்கோடு, அம்மன் குளத்தில் ஆகாயத் தாமரை செடிகளை அகற்றும் பணியை நகராட்சி ஆணையா் திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.

திருச்செங்கோடு, புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்மன் குளத்தில் ஆகாயத் தாமரைகள் அதிக அளவில் வளா்ந்துள்ள நிலையில், அவற்றை அகற்றும் பணி தற்போது தொடா்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் கரையைச் சுற்றியுள்ள முள் மரங்கள், களைகள் ஆகியவையும் அகற்றப்பட்டு வருகிறது.

இப்பணியை நகராட்சி ஆணையா் அருள் திங்கள்கிழமை பாா்வையிட்டாா். குளத்தில் இருந்து அகற்றப்பட்டு கரையில் கொட்டி வைக்கப்பட்டுள்ள ஆகாய தாமரைகளை அகற்றுவது குறித்தும், குளத்தில் மீண்டும் ஆகாயத் தாமரைகள் பரவாமல் தடுக்கவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நகராட்சி பொறியாளா் சரவணன், உதவி பொறியாளா் செந்தில்குமாா், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி தலைவா் சுரேஷ் பாபு ஆகியோருடன் கலந்தாலோசித்தனா்.