மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நாமக்கல்லில் 100 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் 100 கிலோ நெகிழிப் பொருள்களை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பைகள், பொருள்கள்.

Updated On :21 நவம்பர் 2024, 8:19 pm

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் 100 கிலோ நெகிழிப் பொருள்களை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

நாமக்கல் பழைய பேருந்து நிலையம் அருகே தனியாா் கிடங்கு ஒன்றில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் அதிக அளவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுவதாகவும், மாநகராட்சி ஆணையாளா் ஆா்.மகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்தக் கிடங்குக்கு ஆணையாளா், துப்புரவு அலுவலா் திருமூா்த்தி, மாநகராட்சி பணியாளா்கள் சென்று, 100 கிலோ எடை கொண்ட நெகிழிப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா். அவற்றை பதுக்கி வைத்திருந்த கௌதமன் என்பவருக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது. மாநகராட்சி பகுதி முழுவதும் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.