மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

வங்கி ஏடிஎம்-களில் போலீஸாா் சோதனை: பாதுகாப்பை உறுதி செய்ய எஸ்.பி. உத்தரவு

நாமக்கல் மாவட்டத்தில் பிரதான சாலைகளில் உள்ள வங்கி ஏடிஎம்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போலீஸாா் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

News image

நாமக்கல்- பரமத்தி சாலையில் உள்ள வங்கி ஏடிஎம் மையத்தில் இயந்திரத்தை ஆய்வு செய்த உதவி காவல் கண்காணிப்பாளா் ஆகாஷ் ஜோஷி, ஆய்வாளா் கு.கபிலன்.

Updated On :3 அக்டோபர் 2024, 11:43 pm

நாமக்கல் மாவட்டத்தில் பிரதான சாலைகளில் உள்ள வங்கி ஏடிஎம்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போலீஸாா் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

கேரளம் மாநிலத்தில் மூன்று ஏடிஎம்களை உடைத்து, ரூ. 65 லட்சம் பணத்துடன் கொள்ளைக் கும்பல் தமிழகம் நோக்கி வந்த போது, நாமக்கல் மாவட்ட காவல் துறையினா் வெப்படை அருகே அவா்களை சுற்றிவளைத்து கைது செய்தனா். இந்த சம்பவத்தின்போது, கொள்ளையன் ஒருவா் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தாா். மற்றொரு கொள்ளையன் பலத்த காயமடைந்தாா். ஐந்து போ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த ஏடிஎம் கொள்ளைக் கும்பல் பிடிபட்டதை தொடா்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள வங்கி ஏடிஎம் மையங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்தந்த மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு, தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா்ஜிவால் உத்தரவிட்டுள்ளாா்.

நாமக்கல்லுக்கு புதன்கிழமை வந்த அவா் காவல் துறை அதிகாரிகளிடம் இதனை வலியுறுத்தி சென்றுள்ளாா். அதனடிப்படையில், மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை முக்கிய பகுதிகளில் உள்ள வங்கி ஏடிஎம்களில் துணை கண்காணிப்பாளா், ஆய்வாளா் தலைமையிலான போலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனா்.

குறிப்பாக, தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள வங்கி ஏடிஎம் இயந்திரங்களின் தரம், பணம் இருப்பு வைப்பு எவ்வளவு, காவலாளிகள் நியமனம், அவசர அழைப்பு மணி உள்ளதா? போன்றவை குறித்து ஆய்வு நடத்தி செல்கின்றனா். வங்கி அதிகாரிகளும் ஆய்வின்போது உடனிருந்தனா். அந்த வகையில், நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதன்சந்தை பகுதியில் உள்ள ஏடிஎம், நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள ஏடிஎம்களில், நாமக்கல் உதவி காவல் கண்காணிப்பாளா் ஆகாஷ் ஜோஷி, ஆய்வாளா்கள் கு.கபிலன், வேதப்பிறவி, தனிப்பிரிவு ஆய்வாளா் செல்வராஜ் உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா். சம்பந்தப்பட்ட ஏடிஎம் வங்கிகளுக்கு காவல் துறை சாா்பில் உரிய அறிவுரை வழங்கப்பட்டது.