மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள சிறுத்தையைப் பிடித்து, மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மக்களை ஆபத்தில் விட்டுவிடக் கூடாது என்று தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விடியோ வெளியிட்டு வலியுறுத்தியுள்ளார்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒன்னிப்பாளையம் கக்குராயன் மலை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 20 நாள்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரிய வந்துள்ளது. வனத்துறையும், கிராம மக்களும், சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்து, கிட்டத்தட்ட ஒரு வார காலம் கடந்து விட்டது. ஆனால், இன்னும் சிறுத்தை பிடிக்கப்படாமல் இருப்பது, மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள சிறுத்தையைப் பிடித்து, மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்க பதிவில்,
ஒன்னிப்பாளையம் கக்குராயன் மலை சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையும் கிராம மக்களும் உறுதி செய்து ஒரு வாரத்திற்கு மேலாகியும், இதுவரை அந்த சிறுத்தைப் பிடிபடாமல் சுதந்திரமாக உலா வருவது இந்த பகுதி மக்களிடையே அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தி உள்ளது.
பகலில் கூட வீட்டை விட்டு வெளியே வர அஞ்சும் நிலையில் மக்கள் இருக்கும் போது, நிர்வாகம் எங்கே தூங்கிக் கொண்டு இருக்கிறது? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தேர்தல் பணிகளில் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் மூழ்கியிருக்கும் இந்தச் சூழலில், மக்களின் உயிர் பாதுகாப்பை ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என அண்ணாமலை தனது பதிவில் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக வனத்துறை, உடனடியாகத் தலையிட்டு, அதிநவீன கேமரா டிராப்கள் மற்றும் தானியங்கி கூண்டுகள் மூலம் விஞ்ஞானப் பூர்வமான தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தி, பாதுகாப்பு வலை அமைத்து, சிறுத்தையைப் பிடித்து, மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு வினாடியும் ஒரு உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ள நிலையில், தேர்தல் பணிகளைக் காரணம்காட்டி வனத்துறை மெத்தனமாக இருக்கக்கூடாது" என அவர் ஆவேசமாகப் பதிவு செய்து உள்ளார்.
கோயம்புத்தூர் புறநகர்ப் பகுதிகளில் மனித-வனவிலங்கு மோதல் அதிகரித்து வரும் நிலையில், அண்ணாமலையின் சமூக வலைதள பதிவு வனத்துறை அதிகாரிகள் இடையே ஒருவித அழுத்தத்தை உருவாக்கி உள்ளது.
Summary
Leopard Scare Near Coimbatore; Do Not Make the Public Scapegoats for the Sake of Elections...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடலூா் மக்களின் தேவைகளை பூா்த்தி செய்வேன்: அமைச்சா் பி.ராஜ்குமாா் உறுதி

மக்களின் அடிப்படை பிரச்னைகள் தீா்க்கப்படும் -ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ உறுதி

பள்ளி வாகனங்கள் ஆய்வு: குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

சுற்றுலாத் தலங்களில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - சீமான்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




