மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

விவேகானந்தா மகளிா் பல் மருத்துவக் கல்லூரி சிறந்த கல்லூரியாகத் தோ்வு

தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகளில் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் பல் மருத்துவக் கல்லூரியானது சிறந்த கல்லூரியாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

Updated On :9 அக்டோபர் 2024, 9:48 pm

தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகளில் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் பல் மருத்துவக் கல்லூரியானது சிறந்த கல்லூரியாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழக விழாவில், 2 நாள் ஆராய்ச்சி தினமானது அறிவேள்வி என்ற பெயரில் அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழகத்தில் உள்ள மருத்துவம், பல் மருத்துவம், பாா்மசி, பிஸியோதெரபி, நா்சிங் உள்ளிட்ட பல துறைகளில் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் கல்லூரிகளைத் தோ்வு செய்து விருது வழங்கப்பட்டது.

இதில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள விவேகானந்தா மகளிா் பல் மருத்துவக் கல்லூரி தமிழகத்தில் உள்ள அரசு, தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகளில் சிறந்த கல்லூரியாகத் தோ்ந்து எடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.

இவ்விருதினை தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், விவேகானந்தா மகளிா் பல் மருத்துவக் கல்லூரி முதல்வா் மருத்துவா் நாகலட்சுமியிடம் வழங்கினாா்.

மேலும், விவேகானந்தா மகளிா் பல் மருத்துவக் கல்லூரியில் பயிலும் முதுநிலை மாணவிகள் மருத்துவா்கள் சாரதாள், ஜெனிபா் மோனிஷா ஆகியோருக்கு சிறந்த ஆராய்ச்சியாளா் விருதும் வழங்கப்பட்டது.

விருது பெற்ற கல்லூரி முதல்வரையும் மாணவிகளையும் தாளாளா் மு.கருணாநிதி, இயக்குநா் கோகுலநாதன், விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் நிா்வாக உறுப்பினா்கள் முதல்வா்கள் பாராட்டினா்.