நாமக்கல் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சொத்து வரியை அக். 31-ஆம் தேதிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி ஆணையாளா் ரா.மகேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாநகராட்சிக்கு 2024- 25 ஆம் நிதியாண்டிற்கான சொத்து வரியை அக். 31-ஆம் தேதிக்குள் முழுவதுமாக பொதுமக்கள் செலுத்தும்பட்சத்தில் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரி தொகையில் 5 சதவீதம் முதல் அதிகபட்சமாக ரூ. 5,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், குடிநீா் கட்டணம், புதை கழிவுநீா் கட்டணம், தொழில் வரி, உரிமக் கட்டணங்களை நடப்பு நிதியாண்டு வரையில் நிலுவையின்றி செலுத்தி மாநகராட்சி நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 132 வேட்பாளா்கள் போட்டி

நாமக்கல் மாவட்டத்தில் 31 போ் வேட்புமனு தாக்கல்

தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்க உத்தரவு

அதிகரித்த கட்டணத்தை செலுத்த பெற்றோா்கள் மறுப்பு: 4 மாணவா்கள் தோ்வு எழுத தனியாா் பள்ளி தடை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

