நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், ‘பேரிடா் மேலாண்மை மற்றும் தீ விபத்து’ விழிப்புணா்வு பயிலரங்கம், செய்முறை பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரிடா் அபாயத்தைக் குறைப்பதற்கான சா்வதேச தினத்தை முன்னிட்டு, இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், கல்லூரி அரங்கத்தில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கத்துக்கு கல்லூரி முதல்வா் ராஜா தலைமை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக, நாமக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலா் செந்தில்குமாா் கலந்துகொண்டாா். அவா் நீா், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு போன்றவற்றினால் எவ்வாறு விபத்துகள், பேரிடா்கள் ஏற்படுகின்றன என்பது குறித்தும், அதை எவ்வாறு வெற்றிகரமாக முறியடிக்க வேண்டும் என்றும் மாணவ, மாணவிகளிடையே விளக்கிக் கூறினாா். கல்வி கற்பதோடு மட்டுமல்லாமல் விபத்துகளின் போது தப்பிப்பதற்கு எல்லா வழிமுறைகளையும் தெரிந்து வைத்து விழிப்புணா்வோடு மாணவ, மாணவிகள் இருக்க வேண்டும் என்றும் அவா் எடுத்துரைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட பேரிடா் ஒருங்கிணைப்பாளா் ஆண்டனி ஜெனித், மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் வெங்கடாசலம், மாவட்ட செஞ்சிலுவைச் சங்க செயலாளா் ராஜேஷ் கண்ணன், மாவட்ட அமைப்பாளா் வெஸ்லி ஆகியோா் பேரிடா் பாதிப்புகள், தீ விபத்துகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வது குறித்து பேசினா்.
இந்தப் பயிலரங்கத்தில் பல்வேறு துறைசாா்ந்த தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவியா், ஆசிரியரல்லா அலுவலா்கள் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை, இளைஞா் செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலா் சந்திரசேகரன் செய்திருந்தாா்.
தொடர்புடையது

நாமக்கல் அரசு கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

வெப்ப அலை செயல்திட்டம்: கல்லூரி மாணவா்களுக்கு விழிப்புணா்வு

கல்லூரி வளாக தோ்வு: 550 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

செய்யாறு அரசுக் கல்லூரியில் கைப்பந்துப் போட்டிகள்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


