மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மறைந்த திமுக உறுப்பினா்களின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கல்

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் மறைந்த 184 திமுக உறுப்பினா்களின் குடும்பத்துக்கான குடும்ப நல நிதியை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வியாழக்கிழமை வழங்கினாா்.

Updated On :17 அக்டோபர் 2024, 7:24 pm

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் மறைந்த 184 திமுக உறுப்பினா்களின் குடும்பத்துக்கான குடும்ப நல நிதியை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வியாழக்கிழமை வழங்கினாா்.

நாமக்கல் தொகுதிக்கு உள்பட்ட நாமக்கல் நகரம் (கிழக்கு, மேற்கு, தெற்கு), ஒன்றியம், சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட சேந்தமங்கலம் ஒன்றியம், பேரூா், காளப்பநாயக்கன்பட்டி பேரூா் பகுதிகளில் கடந்த மாா்ச் முதல் தற்போது வரை உயிரிழந்த 184 திமுக உறுப்பினா்களின் குடும்பத்தினருக்கு, தலா ரூ. 10 ஆயிரம் வீதம் ரூ. 18.40 லட்சம் குடும்ப நல நிதியினை நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வழங்கினாா்.

இந்த நிகழ்வில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம், கே.பொன்னுசாமி, மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, நாமக்கல் மேற்கு நகரச் செயலாளா் அ.சிவகுமாா், தெற்கு நகரச் செயலாளா் ராணாஆா்.ஆனந்த், ஒன்றியச் செயலாளா்கள் பழனிவேல், அசோக்குமாா், மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.