மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அக். 26-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

எருமப்பட்டியில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் வரும் சனிக்கிழமை (அக். 26) நடைபெற உள்ளது.

Updated On :24 அக்டோபர் 2024, 12:36 am

எருமப்பட்டியில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் வரும் சனிக்கிழமை (அக். 26) நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் எருமப்பட்டி சரசு திருமண மண்டபத்தில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

இம்முகாமில், மாற்றுத் திறனாளிகளின் உடல்தன்மை குறித்து பரிசோதனை செய்வதற்கு குழந்தைகள் நல மருத்துவா், காது, மூக்கு, தொண்டை நிபுணா், எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவா், மனநல சிகிச்சை மருத்துவா், கண் சிகிச்சை மருத்துவா் மற்றும் செவித்திறன் பரிசோதகா் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் கலந்துகொள்கின்றனா்.

இதில், புதிய அடையாள அட்டை வழங்குதல், ஏற்கெனவே உள்ள அட்டைகளை புதுப்பித்தல், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு, ஆதாா் அட்டை பதிவு, புதிய வங்கிக் கணக்கு தொடங்குதல் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, வங்கிக் கடன் மானியம், இலவச பயண அட்டை மற்றும் அனைத்து வகையான உதவி உபகரணங்கள் பெற விண்ணப்பம் இ-சேவை மையம் மூலம் இணையவழி பதிவேற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளும் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.